தமிழ் சினிமா

கரு.பழனியப்பனின் ‘வா தமிழா வா’

செய்திப்பிரிவு

சென்னை: கலைஞர் தொலைக்காட்சியில் ‘வா தமிழா வா’ என்ற புதிய விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. வரும் 11-ம் தேதி முதல் ஞாயிறுதோறும் பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை, இயக்குநரும், நடிகருமான கரு பழனியப்பன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் இரு தலைப்புகளை ஏற்று பொதுமக்கள் இரு குழுக்களாக விவாதிப்பார்கள். பல்வேறு சூழ்நிலைகளில் நடக்கும் பலதரப்பட்ட மக்களின் வாழ்வியலையும், மனதிற்கு நெருக்கமான, அன்றாடம் நாம் பார்த்து கடந்து செல்லும் தலைப்புகளையும் விவாதிக்கும் இந்த நிகழ்ச்சி, அவற்றின் பிரச்சனைகளைக் களையவும் வழி வகுக்கிறது என்று கலைஞர் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT