தமிழ் சினிமா

“சாதி ரீதியாக படம் எடுப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்”: எஸ்.வி.சேகர் பேச்சு

செய்திப்பிரிவு

சென்னை: சாதி ரீதியான படங்களை எடுப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் அஜித்குமார் இயக்கத்தில் கிஷோர் நடித்துள்ள 'முகை' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (ஜூன் 6) சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் எஸ்.வி.சேகர் பேசியதாவது:

சின்னப் படங்கள் வெற்றி பெறுவது திரையுலகத்திற்கு மிகவும் நல்லது. 80கள், 90களில் படத்தின் தொடக்கத்தின் கடவுளை காட்டுவார்கள். ஆனால் இப்போது சியர்ஸ் என்று டாஸ்மாக்கில் குடிப்பதை காட்டுகிறார்கள். டாஸ்மாக்-க்கு ஏன் பப்ளிசிட்டி கொடுக்கிறீர்கள்?

அதே போல சினிமாவில் சாதிரீதியான படங்களை எடுப்பதை குறைத்துக் கொள்ளுங்கள். எல்லா சாதி மக்களும் பார்க்க வேண்டும் என்றால் எல்லா சாதி மக்களுக்கும் பிடிக்கும்படி படத்தை எடுங்கள். சாதியை தூக்கிப் பிடிப்பது தவறில்லை. அடுத்த சாதியை தவறாகப் பேசாதீர்கள். இந்தியாவில் தான் இத்தனை சாதி, மதம், மொழி இருக்கிறது. அப்படி இருக்கும்போது எப்போதோ 100,150 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவற்றை எல்லாம் பேசக்கூடாது. யாரோ தாத்தாவுடைய தாத்தா செய்த தவறுக்காக அவரது கொள்ளுப் பேரனை எப்படி ஜெயிலில் போடமுடியும்?

இவ்வாறு எஸ்.வி.சேகர் பேசினார்.

SCROLL FOR NEXT