தமிழ் சினிமா

லிங்குசாமியின் 'பையா 2' வில் கார்த்தி?

செய்திப்பிரிவு

சென்னை: கார்த்தி, தமன்னா நடித்து 2010ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம், ‘பையா’. லிங்குசாமி இயக்கிய இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். ஆர்.மதி ஒளிப்பதிவு செய்திருந்தார். பிருந்தாசாரதி வசனம் எழுதியிருந்தார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது உருவாகிறது. இதில் ஆர்யா, பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக முதலில் கூறப்பட்டது.

இந்நிலையில் முதல் பாகத்தில் நடித்த கார்த்தியே இதிலும் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் நடித்தால் தமன்னாவும் நடிக்கலாம் என்றும் படத்தை ஸ்டூடியோ கிரீன் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுபற்றி விசாரித்தபோது, “ஹீரோ யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்றும் பேசி வருகிறது. முடிவானதும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்” என்றனர்.

SCROLL FOR NEXT