தமிழ் சினிமா

“நீங்கள்தான் நான் என்பதை உணர்கிறேன் அப்பா” - ரஜினி குறித்து மகள் ஐஸ்வர்யா நெகிழ்ச்சி

செய்திப்பிரிவு

சென்னை: ’லால் சலாம்’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருவது குறித்து அவரது மகளும், படத்தின் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை எழுதியுள்ளார்

தனுஷ் நடித்த '3', கவுதம் கார்த்திக் நடித்த 'வை ராஜா வை' படங்களுக்குப் பிறகு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படம், 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில், 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே திருவண்ணாமலை, மும்பை போன்ற இடங்களில் நடந்து முடிந்த நிலையில், புதுச்சேரி ஏ.எப்.டி பஞ்சாலை வளாகத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தில் ரஜினிகாந்த் நடிப்பது குறித்து அவரது மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நான் உங்களை பார்க்கிறேன். நான் உங்களை வைத்து படமெடுக்கும் ஒருநாள் வரும் என்று நான் கற்பனை கூட செய்ததில்லை. நான் உங்களை மிகவும் மதிக்கிறேன். சிலசமயம் நான் உங்கள் வழியாக பார்க்கிறேன். பெரும்பாலான முறை உங்களுடன் இந்த உலகத்தை பார்க்கிறேன். ஒவ்வொரு நாளும் நீங்கள்தான் நான் என்பதை உணர்கிறேன் அப்பா. உங்களை அதிகமாக நேசிக்கிறேன்.

இவ்வாறு அந்த பதிவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT