மலையாள நடிகையான நமிதா பிரமோத், தமிழில் என் காதல் புதிது, அவள் பெயர் ரஜினி, நிமிர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வரும் அவரை சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பின் தொடர்கின்றனர்.
அவர் சமீபத்தில்தான் டாட்டூ குத்திக்கொள்ளப் போவதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அந்த பதிவில், எர்ணாகுளத்தில் உள்ள ஒரு டாட்டூ ஸ்டூடியோவை குறிப்பிட்டு அங்கு செல்லும் நேரத்தையும் குறிப்பிட்டிருந்தார்.
அவர் குறிப்பிட்டிருந்த நாளில் அங்கு சென்றபோது எர்ணாகுளத்தைச் சேர்ந்த விபின் என்ற இளைஞர் அவரை வழிமறித்தார். நீங்கள் டாட்டூ குத்திக்கொள்ளக் கூடாது என்று கூறினார். அது என் தனிப்பட்ட விருப்பம் என்று நமிதா பிரமோத் சொன்னார்.
இதையடுத்து அந்த இளைஞர், நமிதா பிரமோத்தை முறையற்ற வகையில் தொட்டு மிரட்டியுள்ளார். இதையடுத்து எர்ணாகுளம் பளரிவட்டம் போலீஸில் அவர் புகார் செய்தார். போலீஸார் விபினை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.