‘புஷ்பா 2’ படத்தை அடுத்து அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கும் படத்தை அட்லீ இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த சயின்ஸ் பிக் ஷன் படத்தில் தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். ராஷ்மிகா மந்தனா உள்பட மேலும் சில நாயகிகள் நடிக்கின்றனர்.
மெகா பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் டைட்டில் டீஸர், அல்லு அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்.8-ம் தேதி வெளியாக இருக்கிறது. அந்த டீஸர், பிரமிக்க வைக்கும் வகையிலும் அல்லு அர்ஜுனின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் விதமாகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
“அல்லு அர்ஜுனை இதற்கு முன் பார்த்திராத அவதாரங்களில் இப்படம் காண்பிக்க இருக்கிறது. அவர் ஒரு குடும்பத்தின் பல தலைமுறைகளை உள்ளடக்கிய 4 வெவ்வேறு வேடங்களில் வருவார்.
இதன் விஎஃப்எக்ஸ் காட்சிகள், ஹாலிவுட் படங்களுக்கு பணியாற்றிய ஸ்டூடியோக்களில் நடைபெற இருக்கிறது. தற்போது மும்பையில் நடைபெற்று வரும் இதன் படப்பிடிப்பு, செப்டம்பரில் முடிவடையும். அடுத்த வருடம் படம் ரிலீஸாகும்” என்று படக்குழு தெரிவித்துள்ளது.