ஃபஹத் பாசில், ஹிப்ஸ்டர், மிதுன் ஜெயசங்கர், ரோசன் என பலர் நடித்து 2024-ல் வெளியான மலையாளப் படம் ‘ஆவேஷம்’. ஜித்து மாதவன் இயக்கிய இப்படம், கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தின் 2-ம் பாகம் உருவாகுமா? என்ற கேள்வி ரசிகர்களால் கேட்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஃபஹத் பாசில் இப்படத்தின் அடுத்த பாகம் உருவாகும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘ஆவேஷம் 2’ படத்தின் பணிகள் 2027 அல்லது 2028-ல் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார். இயக்குநர் ஜித்து மாதவன், தற்போது சூர்யா நடிக்கும் 47-வது படத்தை இயக்கி வருகிறார். அதை முடிந்தபின் ‘ஆவேஷம் 2’ படத்தை இயக்குவார் என தெரிகிறது.