‘ஹனுமான்’ படத்தை இயக்கிய பிரசாந்த் வர்மா, ‘ஜெய் ஹனுமான்’ என்ற படத்தை இயக்குகிறார். பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியான இதை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.
டி.சீரிஸ் நிறுவனம் இணை தயாரிப்பு செய்கிறது. இந்தப் படத்தில் ரிஷப் ஷெட்டி, ஹனுமானாக நடிக்கிறார். தெலுங்கு, தமிழ், இந்தி உள்பட 5 மொழிகளில் உருவாகும் இப்படத்தில் நடிகர் ராணா அஸ்வத்தாமாவாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தில் இந்தி நடிகை வாமிகா கபி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகை வாமிகா கபி தமிழில் மாலை நேரத்து மயக்கம், சமீபத்தில் வெளியான டிசி படங்களில் நடித்துள்ளார்.