கார்த்தி நடிக்கவுள்ள புதிய படத்தினை விவேக் ஆத்ரேயா இயக்கவுள்ளது உறுதியாகி இருக்கிறது.
நானி, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான ’சரிபோதா சனிவாரம்’ என்ற படத்தினை இயக்கியிருந்தார் விவேக் ஆத்ரேயா. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்துக்குப் பிறகு பல்வேறு முன்னணி நாயகர்கள் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்தார்கள்.
தற்போது கார்த்தியை சந்தித்து விவேக் ஆத்ரேயா கதையொன்றை கூறியிருக்கிறார். விரைவில் அடுத்தகட்ட கதை விவாதம் நடைபெற இருப்பதாக ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘வா வாத்தியார்’ படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வில் கார்த்தி குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இந்தக் கூட்டணி இணைந்து படம் பண்ணவிருப்பது உறுதியாகி இருக்கிறது.
தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மார்ஷல்’ படத்தின் கவனம் செலுத்தி வருகிறார் கார்த்தி. இதனைத் தொடர்ந்து எந்தவொரு புதிய படத்திலும் கார்த்தி ஒப்பந்தமாகவில்லை. இயக்குநர் சுந்தர்.சி, சைலேஷ் கோலனு உள்ளிட்ட சிலர் கார்த்தியிடம் கதைகள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.