தென்னிந்திய சினிமா

‘கர்மா’ குறித்து எனக்கு பாடம் கற்பிக்க வேண்டாம் - நடிகர் விநாயகன் கோபம்

செய்திப்பிரிவு

மலை​யாள நடிகர் விநாயகன் ‘ஆடு 3’ என்ற படத்​தில் நடித்து வரு​கிறார். இதன் படப்​பிடிப்பு திருச்​செந்​தூரில் நடந்​த​போது, சண்​டைக்​காட்​சி​யில் அவருக்கு காயம் ஏற்​பட்​டு கழுத்து நரம்​பு பாதிக்கப்பட்டது. கொச்​சி​யில் உள்ள மருத்​து​வ​மனை ஒன்றில் அனு​ம​திக்​கப்​பட்ட அவருக்​குச் சிகிச்சை அளிக்​கப்​பட்​டது. சிகிச்​சைக்​குப் பின் கடந்த புதன்​கிழமை வீடு திரும்பினார். மருத்​து​வர்​கள் அவரை 2 வார காலம் ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர்.

இந்​நிலை​யில் அவர் காயமடைந்​ததை சமூக வலை​தளங்​களில் சிலர் விமர்​சித்​தனர். இது கர்​மா​வின் வினை என்று சிலர் கூறியிருந்​தனர். இதற்​குப் பதிலளித்து பேஸ்​புக்​கில் விநாயகன் வெளி​யிட்ட பதி​வில், “உங்​களைப் போல மோச​மான செயல்​களைச் செய்​யும்​போது இந்​தக் காயம் ஏற்​பட​வில்​லை. அறி​வாளி​கள் போல் நடித்​து, அறி​வில்​லாதவர்​களை நம்பி வேலை செய்​த​போது இது நடந்​தது. விநாயகன் வாழ்ந்​தா​லும் இறந்​தா​லும் இந்த உலகில் எது​வும் மாறாது. ‘கர்​மா’ குறித்து எனக்கு பாடம் கற்பிக்கத் தேவை​யில்​லை.

விநாயகன் தனது சொந்த கர்​மா​வின் பலனை எதிர்​கொள்​வார். உங்​கள் சாபங்​களை​யும் போலி அனு​தாபங்​களை​யும் என்​னிட​மிருந்து விலக்கி வையுங்​கள். விநாயகன் திமிர்​பிடித்​தவன் அல்ல; சுயமரி​யாதை கொண்ட மனிதன். காலமே என்​னைக் கொல்​லும் வரை, நான் பேசிக்​கொண்டே இருப்​பேன். ஜெய் ஹிந்த்​, கிறிஸ்​து​மஸ் வாழ்த்​து​கள்​” என்​று கூறி​யுள்​ளார்​.

SCROLL FOR NEXT