புரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள ‘ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு’ படத்தில் சம்யுக்தா, தபு, துனியா விஜய், பிரம்மாஜி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசை அமைத்துள்ளார்.
பூரி கனெக்ட்ஸ், ஜே.பி.மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் இது. இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துவிட்டதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. படத்தை விரைவில் வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இது, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.