விஜய் தேவரகொண்டா நடிக்கும் படம் ‘ரவுடி ஜனார்த்தனா’. ரவி கிரண் கோலா இயக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். 1980-களில் கிழக்கு கோதாவரியைக் களமாகக் கொண்ட இந்தப் படம், டிசம்பரில் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இதன் முதல் தோற்றம் வரவேற்பைப் பெற்ற நிலையில், விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளை முன்னிட்டு புதிய போஸ்டரை படக் குழு வெளியிட்டுள்ளது. அதில் விஜய் தேவரகொண்டா கையில் துப்பாக்கியுடன் தீவிரமான தோற்றத்துடன் இருக்க, அவர் நெஞ்சின் மீது கால் வைத்தபடி கீர்த்தி சுரேஷ் உள்ளார். இந்த போஸ்டர் இணையத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது.