தென்னிந்திய சினிமா

யாஷின் ‘த டாக்ஸிக்’ டீஸர் சர்ச்சை: இன்ஸ்டாவில் இருந்து விலகிய உக்ரைன் நடிகை

செய்திப்பிரிவு

யாஷ் ஹீரோ​வாக நடிக்​கும் ‘த டாக்​ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் குரோன்​-அப்​ஸ்’ படத்தை நடிகை கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். இதில், கியாரா அத்​வானி, நயன்​தா​ரா, ஹூமா குரேஷி, ருக்மணி வசந்த் என பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீஸருக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தன.

டீஸரில் ஆபாசமான காட்சிகள் இருப்பதாகக் கூறி, அதை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று கர்நாடக மாநில ஆம் ஆத்மி கட்சியின் மகளிர் அணியினர் அம்மாநில மகளிர் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளனர். இயக்குநர் கீது மோகன்தாஸ் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இந்த டீஸரில் வரும் காட்சியில் நடித்துள்ள உக்ரைன் நடிகையும் மாடலுமான பீட்ரிஸ் டீஃபென்பாக், தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தை நீக்கிவிட்டு அதிலிருந்து விலகியுள்ளார். அவருடைய பக்கத்துக்குச் சென்று பலர் கடும் வார்த்தைகளால் எதிர்ப்பு தெரிவித்துப் பதிவிட்டதால் அவர் விலகியதாகத் தெரிகிறது.

SCROLL FOR NEXT