தென்னிந்திய சினிமா

நெகட்டிவ் விமர்சனம் எதிரொலி: 75% சரிந்த ‘டாக்ஸிக்’ வசூல்

ப்ரியா

மும்பை: யஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான ‘டாக்ஸிக்’ திரைப்படம், முதல் நாளில் ரூ.100+ கோடி வசூலித்த நிலையில், இரண்டாவது நாளில் அதன் வசூல் 75 சதவீதத்துக்கும் அதிகமாக சரிந்துள்ளது.

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடித்துள்ள இத்திரைப்படம், புதன்கிழமை (ஆகஸ்ட் 26) திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளில் இந்திய அளவில் ரூ101.10 கோடியை நிகர வசூலாகப் பெற்று சாதனை தொடக்கம் கண்டது. இருப்பினும், தொடர்ந்து எதிர்மறையான விமர்சனங்கள் வெளியானதை அடுத்து, இரண்டாவது நாளான வியாழக்கிழமை வேலைநாளில் அதன் வசூல் வெறும் ரூ.22.08 கோடியாக சரிந்தது.

இந்தி பதிப்பு அதிகபட்சமாக ரூ.14.15 கோடி ஈட்டியுள்ளது. கன்னட பதிப்பு ரூ.5.51 கோடியையும், தெலுங்கு பதிப்பு ரூ.1.40 கோடியையும், தமிழ் பதிப்பு ரூ.72 லட்சமும், மலையாள பதிப்பு ரூ.30 லட்சமும் வசூலித்துள்ளன. இதன் மூலம் இரண்டு நாட்கள் முடிவில் இந்தியாவில் இப்படத்தின் மொத்த நிகர வசூல் ரூ.123.18 கோடியை (மொத்த வசூல் ரூ.146.80 கோடி) எட்டியுள்ளது.

நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்திரைப்படம் 'ஏ' சான்றிதழ் பெற்றுள்ளது. வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் படத்தின் வசூல் மீண்டும் அதிகரிக்கும் என்று படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.

SCROLL FOR NEXT