தென்னிந்திய சினிமா

’டாக்சிக்’ ஆந்திரா உரிமைத் தொகை சர்ச்சை: தயாரிப்பாளர் பதிலடி

ஸ்டார்க்கர்

‘டாக்சிக்’ ஆந்திரா உரிமைத் தொகை சர்ச்சையானதற்கு தயாரிப்பாளர் தில் ராஜு பதிலடி கொடுத்துள்ளார்.

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டாக்சிக்’. இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ‘துரந்தர் 2’ படத்துடன் மார்ச் 19-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இதன் உரிமைகள் விற்பனை படுவேகமாக நடைபெற்று வருகிறது.

          

இதன் தெலுங்கு உரிமையினை தயாரிப்பாளர் தில் ராஜு 120 கோடி ரூபாய்க்கு கைப்பற்றி இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனை முன்வைத்து இணையத்தில் பலரும் இந்த தொகை மிகவும் அதிகம், இதற்கு சாத்தியமில்லை என்று கருத்து தெரிவித்தார்கள். மேலும், படத்தினை பிரபலமாக்குவதற்கு இப்படி செய்கிறார்கள் எனவும் கிண்டலுக்கு ஆளாக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக விழா ஒன்றில் தில் ராஜுவிடம் கேட்கப்பட்டதற்கு “’டாக்சிக்’ படத்துக்கான தொகை பரிமாற்றம் நடைபெற்றவுடன், வங்கியின் கணக்கு விவரங்களை சந்தேகப்படுவர்களிடம் காட்டுகிறேன்” என்று பதிலடிக் கொடுத்துள்ளார். மேலும், ‘டாக்சிக்’ படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

SCROLL FOR NEXT