அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கும் சயின்ஸ் பிக் ஷன் திரைப்படத்தை இயக்கி வருகிறார், அட்லி. இதை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். ஜான்வி கபூர், மிருணாள் தாக்குர், ராஷ்மிகா மந்தனா ஆகியோரும் நாயகிகளாக நடிக்க இருக்கின்றனர்.
இதில் அல்லு அர்ஜுன் 4 வேடங்களில் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன. “சர்வதேச தரத்துடன் இந்தியாவில் தயாராகும் ‘பான் வேர்ல்ட்’ படமாக இது இருக்கும். இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவில், இந்தப் படம் தயாராகிறது” என படக் குழுவினர் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்தப்படம் 2 பாகங்களாக உருவாக இருக்கிறது என்கிறார்கள். இதில் இப்போது பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் இணைகிறார். அவர், பிளாஷ்பேக் காட்சியில், முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.