நடிகை ருக்​மணி வசந்​த்

 
தென்னிந்திய சினிமா

நடிகை ருக்​மணி வசந்​தின் டீப்ஃபேக் புகைப்படங்களை வெளியிட்டதாக 3 பேர் கைது

நிலா

விஜய் சேது​தி​யின் ஏஸ், சிவ​கார்த்​தி​கேயனின் மதராஸி ஆகிய படங்​களில் நடித்​திருப்​பவர் ருக்​மணி வசந்த். ‘காந்​தா​ரா: சாப்​டர் 1’ படம் மூலம் பான் இந்​தியா நடிகை​யாக பிரபலமானார். இப்​போது ‘டாக்​ஸிக்’, ‘டி​ராகன்’ படங்​களில் நடித்​துள்​ளார்.

இவர், பிகினி உடை​யில் காணப்​படும் நீச்​சல் குள புகைப்​படங்​கள் கடந்த மாதம் இணை​யத்​தில் வேக​மாகப் பரவின. அவை செயற்கை நுண்​ணறி​வால் உரு​வாக்​கப் பட்​டவை என்​றும் அதைப் பகிர வேண்​டாம் என்​றும் ருக்​மணி வசந்த் கேட்​டுக்​கொண்​டார். “ஏஐ மூலம் உரு​வாக்​கப்​பட்ட அப்​பு​கைப்​படங்​கள் முற்​றி​லும் போலி​யானவை, ஜோடிக்​கப்​பட்​ட​வை. அவற்​றைப் பரப்​பிய​வர்​கள் மீது சட்​டப்​பூர்வ நடவடிக்​கைகளைத் தொடங்கி வரு​கிறோம்” என்று கூறி​யிருந்​தார்.

அவர் அளித்த புகாரின் அடிப்​படை​யில் விசா​ரணை நடத்​தப்பட்டு, மொத்​தம் 29 சமூக வலை​தளக் கணக்​கு​கள் மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ள​தாகத் தகவல் வெளி​யானது. இந்​நிலை​யில் ஏ.ஐ. மூலம் ருக்​மணி வசந்​தின் போலி​யான புகைப்​படங்​களை வெளியிட்​ட​தாக ரவி​ கு​மார் (24), சந்​திர​ காந்த் (33), ரஞ்​சித் (25) ஆகியோரை பெங்​களூரு சைபர் க்ரைம் போலீ​ஸார் கைது செய்துள்​ளனர்.

SCROLL FOR NEXT