‘பராசக்தி’ படம் தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா, இந்தியிலும் நடித்து வருகிறார். இவர், ‘புஷ்பா 2’ படத்தில் ஆடிய ‘கிஸ்ஸிக்’ பாடல் தான் தன்னை இந்தியா முழுவதும் பிரபலமாக்கியது என்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், ‘புஷ்பா-2’ திரைப்படத்தில் நான் ஆடிய பாடல் என்னை நாடு முழுவதும் கொண்டு சென்றது. எனது சினிமா கேரியரை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் பாடலாகவும் அது அமைந்தது. அந்த பாடலுக்குப் பிறகுதான் தமிழ், இந்தியில் ஒப்பந்தமானேன்.
இருந்தாலும் இனி ஒரு பாடலுக்கு நடனமாட மாட்டேன். அழுத்தமான நடிப்பைப் பதிவு செய்யும் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்” என்றார். நடிகை ஸ்ரீ லீலா, அனுராக் பாசு இயக்கும் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார். இதையடுத்து மேலும் 2 இந்தி படங்களிலும் அவர் ஒப்பந்தமாகி உள்ளார்.