தென்னிந்திய சினிமா

நாட்​டில் பொது போக்​கு​வரத்​தின் தரம்: நடிகை மீரா சோப்ரா குற்றச்சாட்டு

ப்ரியா

எஸ்​.ஜே.சூர்​யா​வின் ‘அன்பே ஆரு​யிரே’ படத்​தில் நிலா என்ற பெயரில் கதா​நாயகி​யாக அறி​முக​மானவர் மீரா சோப்​ரா. ஜாம்​ப​வான், லீ, மருதமலை, காளை உட்பட சில படங்​களில் நடித்த அவர், மீரா சோப்ரா என்ற தனது இயற்பெயரில் இந்​தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

இவர் உபேர் நிறுவன காரை புக் செய்​து​விட்டு துரதிஷ்டமான அனுபவத்​தைச் சந்​தித்​தேன் என்று கூறியுள்​ளார். அவர் கூறும்​போது, “காலை 6 மணிக்கு உபேரில் ஒரு டாக்​ஸியை முன்​ப​திவு செய்​தேன். ஓட்​டுநர் துர்​நாற்​றம் வீசும், தூசி நிறைந்த காரில் வந்​தார்.

          

ஏன் இவ்​வளவு துர்​நாற்​றம் என்று ஓட்​டுநரிடம் கேட்​ட​போது, அவர் பேசவே முடிய​வில்​லை. கிட்​டத்​தட்​டத் தூங்​கிக் கொண்​டிருந்​தார். நான் 20 நிமிடங்​களுக்​குள் டாக்ஸியிலிருந்து இறங்கி வேறொன்றை முன்​ப​திவு செய்து பயணம் செய்​தேன். ஆனால் 6 மணி நேரத்​துக்கு என்​னிடம் கட்​ட​ணம் வசூலித்​து​விட்​டார்​கள்” என்று தெரிவித்​துள்​ளார்.

நாட்​டின் பொது போக்​கு​வரத்தின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக​வும் இச்​சம்​பவங்​கள் பயணி​கள் பாது​காப்​பைக் கேள்விக்​குள்​ளாக்குவதாகவும் அவர் குற்றம் சாட்​டியுள்​ளார்​.

SCROLL FOR NEXT