தென்னிந்திய சினிமா

கமல்​ஹாசன், ராஷ்மிகா மந்தனாவுக்கு தெலங்​கானா அரசு விருது அறி​விப்பு

ப்ரியா

ஒன்​று​பட்ட ஆந்​திர மாநிலத்​தில் திரைக் ​கலைஞர்​களுக்​காக நந்தி விருதுகளை அம்​மாநில அரசு வழங்கி வந்​தது. இந்​நிலை​யில் அவ்விருதுக்கு மாற்​றாக தெலங்​கானா அரசு கத்​தார் விருதுகளை திரைப்​படத்​துறைக்​காக உரு​வாக்​கி​யுள்​ளது. இந்​நிலை​யில் 2025ம் ஆண்​டுக்​கான விருதுகளை அறி​வித்​துள்​ளது.

கடந்த ஆண்டு ஜனவரி 1 முதல் டிச.31 வரை தணிக்​கைச் சான்றிதழ் பெற்ற படங்​கள் இந்த விருதுகளுக்​குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. அதில் சிறந்த படம், நடிகர், நடிகைகள், தொழில்​ நுட்ப கலைஞர்​களுக்​கான விருதுகளை அரசு அறிவித்துள்​ளது. ‘தண்​டேல்’ படத்​துக்​காக, நாக சைதன்​யா​வுக்கு சிறந்த நடிகர் விருதும் ‘த கேர்ள் பிரண்​டு’ படத்​துக்​காக ராஷ்மிகா மந்​தனாவுக்​குச் சிறந்த நடிகை விருதும் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

          

சிறந்த படமாக ராஜு வெட்ஸ் ராம்​பாய், சிறந்த தேசிய ஒற்றுமைப் படமாக தண்​டேல், சிறந்த சுற்​றுச்​சூழல் படமாக இக்வா, சிறந்த பிரபல பொழுது ​போக்கு படமாக சங்கராந்தி கிவஸ்​துனம், சிறந்த சமூகக் கருத்து படமாக கோர்ட் ஆகிய படங்கள் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளன.

என்​டிஆர் தேசிய விருது சிரஞ்​சீவிக்​கும் பைடி ஜெய்​ராஜ் விருது கமல்​ஹாசனுக்​கும் பிஎன் ரெட்டி விருது சிங்​கீதம் சீனி​வாச ராவுக்கும் நாகிரெட்டி சக்​கர​பாணி விருது, தயாரிப்​பாளர் அஷ்வினி தத்​துக்​கும் ஏஎன்​ஆர் விருது நடிகை ஜெயசு​தாவுக்​கும் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​விருதுகள் மார்ச் 19-ல் வழங்​கப்பட இருக்​கிறது.

SCROLL FOR NEXT