தென்னிந்திய சினிமா

சந்தீப் கிஷனின் ‘கரிகாலா’ முதல் தோற்றம் வெளியீடு!

ப்ரியா

சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படமான ’ ‘கரிகாலா’ படத்தின் முதல் தோற்றம் வெளியாகியுள்ளது.

'ஷம்பாலா' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் யுகேந்தர் முனி, தற்போது 'கரிகாலா' படத்தை இயக்கியுள்ளார்.

ஷைனிங் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் மகிதர் ரெட்டி மற்றும் ராஜசேகர் அன்னபிமோஜு தயாரிக்கும் இந்த பான் இந்தியா திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார்.

சமீபத்தில் கான்செப்ட் போஸ்டர் வெளியான நிலையில், தற்போது படத்தின் தலைப்பும், முதல் தோற்றமும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

'கரிகாலா' முதல் தோற்ற போஸ்டரில், அடர்ந்த மர்மக் காட்டில், கையில் வாளை உயர்த்தியபடி வீரராக குதிரையில் சீறிப்பாயும் சந்தீப் கிஷனுடன், அருகில் கர்ஜித்தபடி பாய்ந்து வரும் கம்பீரமான சிங்கமும் இடம்பெற்றுள்ளது.

இப்படத்துக்கு பிரவீன் பங்காரி ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீசரண் பாகலா இசையமைக்கிறார். தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகி வரும் 'கரிகாலா' இரண்டு அத்தியாயங்களாக வெளியாகவுள்ளது. முதல் அத்தியாயம் 2027 ஜூலை 2-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் அத்தியாயம் அக்.28-ல் வெளியாக உள்ளது.

SCROLL FOR NEXT