நடிகர் சந்தீப் கிஷன் ஃபேன்டசி த்ரில்லர் கதையில் நடிக்கிறார். இப்படத்தை தெலுங்கில் வெற்றி பெற்ற ‘சம் பாலா’ படத்தைத் தயாரித்த ஷைனிங் பிக்சர்ஸ் சார்பில் மகிதர் ரெட்டி, ராஜசேகர் அன்னபிமோஜு தயாரிக்கின்றனர். இதை உகந்தர் முனி இயக்குகிறார்.
இந்தப் புதிய பட அறிவிப்பை முன்னிட்டு, படக்குழு கான்செப்ட் போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில், சிங்கம் மற்றும் ஓநாய் நேருக்கு நேர் மோதும் காட்சி இடம்பெற்றுள்ளது.
இதற்கு நடுவே, போர்க்களப் பின்னணியில் ஒளிரும் பழமையான வாள் காட்சியளிக்கிறது. “சில போர்கள் ஒருபோதும் முடிவதில்லை... சில மன்னர்கள் ஒருபோதும் இறப்பதில்லை” என்ற டேக்லைனும் இடம்பெற்றுள்ளது. இந்த ஃபேன்டஸி திரில்லர் படத்தில் புதிய பரிமாணத்தில் சந்தீப் கிஷன் தோன்று கிறார். அதிக பட்ஜெட்டில், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பான்-இந்தியா படமாக உருவாகிறது. இப்படம் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.