தென்னிந்திய சினிமா

​இயக்​குநர் ராஜமவுலி​யின் ‘வாரணாசி’​யில் சுதீப்!

ப்ரியா

மகேஷ்​பாபு கதா​நாயக​னாக நடிக்​கும் ‘வாரணாசி’ படத்தை இயக்கி வரு​கிறார் ராஜமவுலி. இதில் பிரி​யங்கா சோப்ரா நாயகி​யாக​வும் பிருத்​வி​ராஜ் வில்​ல​னாக​வும் நடிக்கின்​றனர். பிர​காஷ் ராஜ் உள்பட பலர் முக்​கிய வேடங்களில் நடிக்​கின்​றனர்.

ஆக் ஷன் அட்​வெஞ்​சர் பேன்​டஸி படமான இதன் கதையை ராஜமவுலி​யின் தந்​தை, விஜயேந்​திர பிர​சாத் எழு​தி​யுள்​ளார். இப்​படம், 2027-ம் ஆண்டு ஏப்​.7-ல் வெளி​யாகிறது. படத்​தின் முக்​கிய​மான காட்​சிகள் கென்யா காடு​களில் படமாக்​கப்​பட்​டுள்​ளன.

          

அடுத்து அண்​டார்​டி​கா​விலும் இதன் படப்​பிடிப்பு நடக்க இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. அதிக பட்​ஜெட்​டில் உரு​வாகும் இந்​திய சினிமா என்று இதைச் சொல்​கிறார்​கள். இந்​நிலை​யில் இப்​படத்​தில் கிச்சா சுதீப் இணைந்​துள்​ள​தாகச் செய்​தி​கள் வெளி​யாகி​யுள்​ளன.

இதுபற்றி அதி​காரப்​பூர்வ தகவல் இல்லை என்​றாலும் அவர் முக்​கிய​மான கதா​பாத்​திரத்​தில் நடிக்க இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. ராஜமவுலி இயக்​கிய ‘நான் ஈ’ படத்​தில் முதன்மை பாத்​திரத்​தில் நடித்​திருந்த சுதீப், ‘பாகுபலி’ படத்​தில் கவுரவ வேடத்​தில் நடித்​திருந்​தார்.

SCROLL FOR NEXT