2027-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி ‘ஸ்பிரிட்’ வெளியாகும் என இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா தெரிவித்துள்ளார்.
சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் படம் ‘ஸ்பிரிட்’. இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு மார்ச் இறுதியில் மீண்டும் தொடங்குகிறது. அதிலிருந்து தொடர்ச்சியாக ‘ஸ்பிரிட்’ படத்தில் மட்டுமே கவனம் செலுத்தவுள்ளார் பிரபாஸ். தற்போது இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 5-ம் தேதி வெளியாகும் என்று இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா அறிவித்துள்ளார்.
இப்படத்தில் திரிப்தி டிம்ரி, விவேக் ஓபராய், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் பிரபாஸ் உடன் நடித்து வருகிறார்கள். இதனை டி-சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்து வருகின்றன. இதன் ஓடிடி உரிமையினை ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம் பெரும் விலை கொடுத்து வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வெளிநாட்டில் இருக்கும் பிரபாஸ், இந்தியா திரும்பியவுடன் ‘ஃபெளசி’ படத்தில் நடிக்கவுள்ளார். பின்பு ‘கல்கி 2’ படத்திற்காக சில நாட்கள் தேதிகள் ஒதுக்கியிருக்கிறார். பின்பு ‘ஸ்பிரிட்’ படத்துக்காக நீண்ட தேதிகளை ஒதுக்கியுள்ளார். மேலும், ‘ஸ்பிரிட்’ படத்துக்காக தனது உடலமைப்பையும் மாற்றியமைத்துள்ளார் பிரபாஸ்.