பிரபாஸ் நடிப்பில் வெளிவர இருக்கும் ‘ஸ்ரிபிட்’ படம் குடும்ப பார்வையாளர்களை மனதில் வைத்து எடுக்கப்பட்ட படம் இல்லை. அந்தப் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் தான் கிடைக்கும் என்று படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா கூறியுள்ளார்.
தனது சகோதரர் பிரணய் ரெட்டி வாங்காவின் பத்ரகாளி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘ரோமாஞ்சகம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சந்தீப் ரெட்டி வாங்கா கலந்து கொண்டு பேசினார். அப்போது ‘ஸ்பிரிட்’ படம் குறித்த தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறும்போது, “ரோமாஞ்சகம் படம் பார்த்தேன், எனக்கு படம் பிடித்திருக்கிறது. இது ஒரு நகைச்சுவைப் படம். முதல் முறையாக எங்களுடைய பத்ரகாளி பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படம் ‘யு’ சான்றிதழ் வாங்கி உள்ளது.
இதுவரை எங்களின் எல்லா படங்களுக்கும் ‘ஏ’ சான்றிதழே கிடைத்திருக்கின்றன. பிரபஸுடன் பணியாற்றும் எனது அடுத்த படமான ‘ஸ்பிரிட்’ படத்துக்கும் ‘ஏ’ சன்றிதழே கிடைக்கும்.
‘ஸ்பிரிட்’ படம் திட்டமிட்டபடி 2027 மார்ச் 5-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதில் எந்த மற்றமும் இல்லை. நாங்கள் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறோம். இன்னும் 65 நாட்கள் படப்பிடிப்பு மீதம் இருக்கிறது. அதையும் குறித்த நேரத்துக்குள் முடித்து விடுவோம்.
ஆம், ‘வாரணாசி’ படம் ஏப்ரல் 7-ம் தேதி வெளியாகிறது. இரண்டு படத்துக்கும் சுமார் 37 நாட்கள் இடைவெளி இருக்கிறது. எனது படத்தின் வெற்றிக்கு இந்த இடைவெளி போதுமானது தான்’ என்று கூறினார்.