தென்னிந்திய சினிமா

“வார்த்தைகளில் கவனம்...” - ஜென்ஸீக்களை சாடிய கங்கனாவுக்கு சோனு சூட் அறிவுரை

ப்ரியா

நீட் தேர்வுக்கு எதிரான மாணவர் போராட்டம் குறித்த பாஜக எம்பி கங்கனா ரணாவத் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகர் சோனு சூட், பொதுவாழ்வில் இருப்பவர்கள் கவனமாக பேச வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஜென்ஸீ இளைஞர்களை ‘சாக்கடை தலைமுறை’ என்று விமர்சித்த கங்கனா ரணாவத் குறித்து பேசிய சோனு சூட், “அவர் கூறியவற்றை நான் இன்னும் கேட்கவில்லை. ஆனால், அந்த இளைஞர்கள்தான் நடிகர்களை உருவாக்குகிறார்கள், நீங்கள் இந்த இடத்துக்கு வர உதவி இருக்கிறார்கள்.

அவர் (கங்கனா) அவ்வாறு பேசியிருந்தால், அது அவமானகரமான ஒன்று. அவர் அப்படி சொல்லியிருக்க கூடாது. எவ்வளவு காலம் இளைஞர்கள் உங்களுடன் நிற்கிறார்களோ அந்த அளவுக்கு நீங்கள் ஜொலிப்பீர்கள்.

சிந்திய வார்த்தைகளை அள்ள முடியாது என ஒரு சொலவடை உண்டு.பொதுவாழ்வில் இருப்பவர்கள் பேசுவதற்கு முன்னால் பல முறை யோசித்த பின் பேச வேண்டும். ஏனெனில் பொது மக்கள் கடவுளின் இன்னொரு வடிவம்” என்று சோனு சூட் கூறினார்.

முன்னதாக, நீட் வினாத்தாள் கசிவு விவ​காரத்​தில் நடைபெற்ற மாணவர்கள் போராட்​டம் குறித்து பாஜக எம்.பி. கங்​கனா ரணாவத் தனது இன்​ஸ்​டாகி​ராம் பதி​வில் “கரப்​பான் பூச்சி ஜனதா கட்​சி​யினரின் போராட்ட வீடியோக்​களை பார்த்​தேன். என் வாழ்​நாளில் ஒரே இடத்தில் இவ்​வளவு மோச​மான காட்​சிகளை நான் பார்த்ததே இல்​லை. அவர்​கள் பேசும் விதம், பயன்​படுத்​தும் மொழி மிக கொடூர​மாக​வும், கீழ்த்​தர​மாக​வும் உள்ளது.

இவர்​களை யார் பெற்று வளர்க்​கிறார்​கள்? இந்​தியா அழகான பன்​முகத்​தன்மை கொண்ட மக்​கள், கண்ணியத்துட​னும் கலாச்​சா​ரத்​துட​னும் வாழும் இடம். உங்​களை நீங்களே கரப்​பான் பூச்​சிகள் என்று அழைத்​துக் கொண்​டு, அவற்றை போலவே செயல்படுகிறீர்கள். உலகிற்கு உங்கள் குப்​பையை​யும், அசுத்தத்தை​யும் காட்டு​கிறீர்​கள்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT