தென்னிந்திய சினிமா

94 வயது பழம்​பெரும் இயக்குநர் சிங்​கீதம் சீனி​வாச​ ராவின் ‘சிங் கீதம்’

செய்திப்பிரிவு

பழம்​பெரும் இயக்​குநர் சிங்​கீதம் சீனி​வாச ராவ், தமிழ், தெலுங்​கு, இந்​தி, கன்​னடத்​தில் பல படங்​களை இயக்கி இருக்​கிறார்.

தமிழில், ராஜ​பார்​வை, பேசும் படம், அபூர்வ சகோ​தரர்​கள், மைக்​கேல் மதன காம​ராஜன், மகளிர் மட்​டும், மும்பை எக்​ஸ்​பிரஸ் ஆகிய படங்​களை இயக்​கி​யுள்​ளார். 94-வது வயதான சிங்​கீதம் சீனி​வாச ராவ் தனது 61-வது திரைப்​படத்தை இப்​போது இயக்கி முடித்​திருக்​கிறார். இப்​படத்​துக்கு ‘சிங் கீதம்’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர்.

இதில் அயான், அகல்யா பாம்​ரூ, ஷாலினி கொண்​டேபுடி உள்பட பலர் நடித்​துள்​ளனர். அன்​குர் சி ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். தேவி பிர​சாத் இசை அமைத்​துள்​ளார். இப்​படத்தை வைஜயந்தி மூவிஸ் வழங்க, இயக்​குநர் நாக் அஸ்​வின் தயாரித்​துள்ளார். ஜூன் 11-ல் வெளி​யாகும் இந்​தப் படம் ஆர்​வத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இதன் டீஸர் வெளி​யாகி வரவேற்​பைப் பெற்​றுள்​ளது. தனது ஒவ்​வொரு படத்​தை​யும் வித்​தி​யாச​மாகக் கொடுத்​திருக்​கிற சிங்​கிதம் சீனி​வாச ராவ் இப்​படத்​தை​யும் அப்​படியே உரு​வாக்கி இருப்​ப​தாக சமூக வலை​தளங்​களில் கூறி வரு​கின்​றனர்.

SCROLL FOR NEXT