தென்னிந்திய சினிமா

“மவுனமே வலு​வான உரையாடல்” - ‘காந்தி டாக்ஸ்’ பற்றி விஜய் சேதுபதி

செய்திப்பிரிவு

விஜய் சேதுப​தி, அரவிந்த்​சாமி, அதிதி ராவ் ஹைதா​ரி, சித்தார்த் ஜாதவ் உள்பட பலர் நடித்​துள்ள படம், ‘காந்தி டாக்ஸ்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்​துள்ள இந்​தப் படத்தை மராத்தி இயக்குநர் கிஷோர் பாண்​டுரங் பெலெகர் இயக்​கி​யுள்​ளார். ஜீ ஸ்டூடியோஸ் வழங்​கும் இப்படம் மவுன படமாக உரு​வாகி ​உள்ளது.

இந்​தி, தமிழ், தெலுங்கு உட்பட பல்​வேறு மொழிகளில் வெளியாகும் இப்​படத்​தின் மேக்​கிங் வீடியோ ஏற்​கெனவே வெளியாகி வரவேற்​பைப் பெற்​றது. நாளை வெளி​யாகும் இப்​படத்தின் டிரெய்​லர் கவனத்தை ஈர்த்துள்ளது.

          

இப்​படம் குறித்து விஜய் சேதுபதி கூறும்​போது, “வார்த்​தைகள் இன்றி உணர்ச்​சிகளை வெளிப்​படுத்த வேண்​டும் என்ற சவாலை ‘காந்தி டாக்​ஸ்’ எனக்கு அளித்​தது. மவுனமே மிக வலு​வான உரை​யாடலாக மாறும் அரிய படம் இது” என்​றார்.

அதிதி ராவ் ஹைதாரி கூறும்​போது, “வார்த்தைகளை விட உணர்​வு​கள்​தான் இதில் என்னை அதி​கம் நெகிழ வைத்தது. மவுன​மும், நுணுக்​க​மான உணர்​வுகளும் ஒன்றோடொன்று அழகாக இப்படத்தில் இணைந்துள்ளன” என்றார்.

SCROLL FOR NEXT