தென்னிந்திய சினிமா

சிவாஜியின் பேச்சு: நிதி அகர்வால் மறைமுக பதிலடி

ஸ்டார்க்கர்

சிவாஜியின் பேச்சை முன்வைத்து தன்னிடம் கேள்வி எழுப்பியவர்களுக்கு நிதி அகர்வால் மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.

’கோர்ட்’ படத்தில் தனது நடிப்பின் மூலம் அனைவரது பாராட்டையும் பெற்றவர் சிவாஜி. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் அணியும் உடைகள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கினார். “நாயகிகள் கண்டபடி உடைகள் அணிந்தால் நீங்கள் தான் சிக்கலை சந்திக்க வேண்டி வரும்” என்று குறிப்பிட்டார் சிவாஜி. இந்தப் பேச்சினை முன்வைத்து நிதி அகர்வாலை இணையத்தில் கேள்வி எழுப்பத் தொடங்கினார்கள்.

ஏனென்றால் ‘தி ராஜா சாப்’ விழா ஒன்றில் ரசிகர்களுக்கு இடையே சிக்கிக் கொண்டார் நிதி அகர்வால். இந்த வீடியோ பதிவு இணையத்தில் பெரும் வைரலானது. இதனிடையே சிவாஜியின் பேச்சை வைத்து தன்னை கேள்வி எழுப்பவருக்கு மறைமுகமாக பதிலளித்துள்ளார் நிதி அகர்வால். தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “பாதிக்கப்பட்டவரை குறை கூறுவது, பிரச்சினையை திசை திருப்புவதாகும்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே சிவாஜியின் பேச்சுக்கு தெலங்கானா மகளிர் ஆணையம் விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டிசம்பர் 27-ம் தேதி காலை 11 மணிக்கு ஆஜராகி விளக்கமளிக்க உள்ளார். மேலும், தனது பேச்சு சர்ச்சையானதால் மன்னிப்புக் கோரி வீடியோ பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார் சிவாஜி.

SCROLL FOR NEXT