நடிகர் ‘ஆக் ஷன் கிங்’ அர்ஜுன், ஜெய்ஹிந்த், தாயின் மணிக்கொடி, வேதம் உள்பட 12 படங்களை இயக்கியுள்ளார்.
இவர் இப்போது இயக்கியுள்ள படம், ‘சீதா பயணம்’. இதில் அவர் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் நாயகியாக நடித்திருக்கிறார். கன்னட நடிகர் உபேந்திராவின் உறவினர் நிரஞ்சன் கதாநாயகனாக நடித்துள்ளார். சத்யராஜ், பிரகாஷ் ராஜ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தை அர்ஜுனின் ஸ்ரீராம் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகியுள்ளது. காதல் கதையை கொண்ட இப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்.14-ல் ரிலீஸ் ஆகிறது.