தென்னிந்திய சினிமா

சமந்தா படத்​தின் ரிலீஸ் தேதி மாற்றம்

நிலா

நடிகை சமந்​தா, தனது ட்ராலாலா மூவிங் பிக்​சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் ‘மா இண்டி பங்​காரம்’ என்ற படத்தை தயாரித்து முதன்மை பாத்​திரத்​தில் நடித்​துள்​ளார். இதை நந்தினி ரெட்டி இயக்​கி​யுள்​ளார். ‘ஓ! பேபி’ படத்​துக்​குப் பிறகு இரு​வரும் இதில் இணைந்துள்ளனர். இதில் குல்​ஷன் தேவ்​வய்​யா, திகாந்த், கவுதமி, மஞ்​சுஷா முக்​கிய வேடங்​களில் நடித்துள்ளனர். இது காதல், உறவு மற்​றும் வலிமையை அடிப்​படை​யாகக் கொண்ட கதை என்று சமந்தா கூறி​யிருந்​தார்.

மயோசிடிஸ் பாதிப்​புக்​குப் பிறகு சமந்தா நடித்​துள்ள படம் என்​ப​தால், ரசிகர்​கள் மத்​தி​யில் இதற்கு எதிர்​பார்ப்பு நில​வு​கிறது. இதன் டீஸர் வெளி​யாகி வரவேற்​பைப் பெற்​றது. இப்​படம் மே 15-ம் தேடி வெளி​யாக இருப்​ப​தாக அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இப்​போது ஐபிஎல் போட்​டிகள் நடை​பெற்று வரு​வ​தால் இப்​படத்​தின் ரிலீஸ் தேதியை ஜூன் 19-ம் தேதிக்கு மாற்றி வைத்​துள்​ளனர்.

SCROLL FOR NEXT