தென்னிந்திய சினிமா

சமந்தா திடீர் திருமணம்

ஸ்டார்க்கர்

சமந்தா – இயக்குநர் ராஜ் இருவரும் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா மையத்தில் 2-வது திருமணம் செய்துக் கொண்டனர்.

சமீபமாக சமந்தா – ‘பேமிலி மேன்’ இயக்குநர் ராஜ் இருவரும் காதலித்து வந்தனர். இருவருமே இதனை உறுதிப்படுத்தவில்லை. ஆனால், அவர்கள் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இதனை உறுதிப்படுத்தின. தற்போது இருவரும் கோயம்புத்தூரில் உள்ள ஈஷாவில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்த திருமணத்தில் இருவருக்கும் மிக நெருக்கமான நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா பின்பு விவகாரத்து பெற்றார். அதே போல் இயக்குநர் ராஜும் திருமணம் செய்து விவகாரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தா – இயக்குநர் ராஜ் இருவருக்குமே இது இரண்டாவது திருமணமாகும். சமந்தா – ராஜ் திருமணம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி, பலரும் வாழ்த்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT