தென்னிந்திய சினிமா

மலையாளத்தில் அறிமுகமாகிறார் ருக்மணி வசந்த்

நிலா

நடிகை ருக்​மணி வசந்த், ‘காந்​தா​ரா: சாப்​டர் 1’ படம் மூலம் இந்​திய முழு​வதும் பிரபல​மா​னார். இப்​போது யாஷின் ‘டாக்​ஸிக்’ படத்தை முடித்​துள்ள அவர், ஜூனியர் என்​டிஆருடன் ‘டி​ராகன்’ படத்​தில் நடித்து வரு​கிறார். இதையடுத்து அவர் மலை​யாள சினி​மா​வில் நாயகி​யாக அறி​முக​மாகிறார்.

இப்​படத்தை ‘ஜய ஜய ஜய ஜய ஹே’ படத்​தின் இணை எழுத்​தாள​ரான நாஷித் முகமது ஃபாமி இயக்​கு​கிறார். இதன் மூலம் அவர் இயக்​குந​ராக அறி​முக​மாகிறார். நிவின் பாலி கதா​நாயக​னாக நடிக்​கும் ரொமான்​டிக் காமெடி படமான இதில் அஜு வர்​கீஸ், ஜகதீஷ், கலாரஞ்​சனி மற்​றும் அசோகன் உள்​ளிட்ட பலர் நடிக்​கின்​றனர்.

மார்ட்​டின் பிரக்​காட் ஃபிலிம்​ஸ், பாலி ஜூனியர் பிக்​சர்​ஸ் நிறு​வனங்​களு​டன் இணைந்து கிரீன் ரூம் புரொடக் ஷன்​ஸ் இப்​படத்​தைத் தயாரிக்​கிறது. நிவின்​ பாலி​யின்​ 51-வது படமான இதன்​ படப்​பிடிப்​பு கொச்​சி​யில்​ தொடங்கியுள்ளது.

SCROLL FOR NEXT