தென்னிந்திய சினிமா

ரூ.150 கோடி வசூலை கடந்தது ரவிதேஜாவின் ‘இருமுடி’

ப்ரியா

ரவிதேஜா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘இருமுடி’ திரைப்படம் ரூ.150 கோடி வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது.  

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவ நிர்வாணா இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ‘இருமுடி’. ரவிதேஜா, ப்ரியா பவானி சங்கர், சாய் குமார், சுவாசிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 21-ம் தேதி தெலுங்கிலும், ‘இருமுடி கட்டு’ என்ற பெயரில் தமிழிலும் வெளியானது. 

படம் வெளியாகி அதன் இரண்டாவது வாரத்தினை எட்டி இருக்கும் நிலையில் உலகம் முழுவதிலும் படம் ரூ.150 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

ரவிதேஜாவின் சமீபத்திய படங்கள் யாவுமே பெரும் தோல்வியை தழுவி வந்த நிலையில், ‘இருமுடி’ மாபெரும் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்படத்துக்கு ரவிதேஜா சம்பளம் பெறாமல் பட விநியோகத்தில் நிசாம் உரிமையினை பெற்றிருந்தார். 

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT