தென்னிந்திய சினிமா

ரூ.200 கோடி வசூல் செய்த ரவிதேஜாவின் ‘இருமுடி’

ப்ரியா

ரவிதேஜாவின் நடிப்பில் வெளியான ‘இருமுடி’ படம் ரூ.200 கோடி வசூல் செய்துள்ளது. ரூ.200 கோடி வசூல் செய்திருக்கும் ரவிதேஜாவின் முதல் படம் இதுவாகும்.

படத்தின் வசூல் குறித்து படக்குழு வெளியிட்டுள்ள தகவலில், ‘வேறு வேறு தலைமுறைகள், வேறு வேறு திரையரங்குகள், ஒரே கொண்டாட்டம் ‘இருமுடி’. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை, இளைஞர்கள் முதல் குடும்பங்கள் வரை எல்லோரும் கொண்டாடும் ‘இருமுடி’ மொத்தம் ரூ.200 கோடி வசூலித்துள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவ நிர்வாணா இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ‘இருமுடி’. ரவிதேஜா, ப்ரியா பவானி சங்கர், சாய் குமார், சுவாசிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 21-ம் தேதி தெலுங்கிலும், ‘இருமுடி கட்டு’ என்ற பெயரில் தமிழிலும் வெளியானது. 

SCROLL FOR NEXT