தென்னிந்திய சினிமா

‘நாகபந்​தம்​’ புரமோஷனுக்​காக ரத யாத்​திரை

நிலா

விராட் கர்​ணா, நபா நடேஷ், ஐஸ்​வர்யா மேனன், மகேஷ் மஞ்ச்​ரேகர், ஜெகபதி பாபு, ஜெயப்​பிர​காஷ், முரளி சர்மா உள்பட பலர் நடிக்​கும் திரைப்​படம், ‘நாகபந்​தம்’. அபிஷேக் நாமா எழுதி இயக்கியுள்ள இப்​படம், ஜூலை 3ம் தேதி தமிழ், தெலுங்​கு, இந்​தி, கன்னடம், மலை​யாள மொழிகளில் வெளி​யாகிறது.

இந்​தப் படத்​தின் புரமோஷன் நிகழ்​வாக, ஹைத​ரா​பாத்​தில் அனந்த பத்​ம​நாப சுவாமி ரதயாத்​திரையைப் படக்​குழு​வினர் தொடங்கி வைத்​தனர். விழா​வில் அனந்த பத்​ம​நாப சுவாமி​யின் பிரம்​மாண்ட திரு​வுரு​வச் சிலை ஒன்று திறந்து வைக்​கப்​பட்​டது. இந்த ரத யாத்​திரை இந்​தி​யா​வின் பல்​வேறு நகரங்​களுக்​குச் சென்று கலாச்​சா​ரப் பெரு​மை​யை​யும் ஆன்​மீகச் செய்​தி​யை​யும் மக்​களிடம் கொண்டு சேர்க்​க​வுள்​ளது.

நிகழ்​வில் பேசிய இயக்​குநர் அபிஷேக் நா​மா, “இது வெறும் திரைப்பட விளம்​பரத்​துக்​கான பயணம் அல்ல; நமது கலாச்​சா​ரம், பாரம்​பரி​யம் மற்​றும் ஆன்​மீகத்தை அடுத்​த தலை​முறைக்​குக்​ கொண்​டு சேர்க்​கும்​ புனித​மான பயணம்​” என்​று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT