நடிகை ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டா திருமணம் கடந்த பிப். 26-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பிரமாண்டமாக நடந்தது. வரவேற்பு நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. திரையுலகினர் திரண்டு வந்து வாழ்த்தினர். பின்னர் விருந்துகளில் பங்கேற்றனர்.
திருமண கொண்டாட்டங்களுக்குப் பிறகு இப்போது படப்பிடிப்பில் இணைந்துள்ளனர். திருமணத்துக்குப் பிறகு அவர் முதன் முதலாகப் படப்பிடிப்புக்கு வந்ததால், படக்குழுவினர் கேக் வெட்டி அவர்களை வரவேற்றனர்.
தெலுங்கில் வெளியான ‘கீத கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ படங்களுக்குப் பிறகு இருவரும் ஜோடியாக நடிக்கும் திரைப்படம், ‘ரணபாலி’. இதை ராகுல் சங்கிருத்யன் இயக்குகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படம்,
1850-களில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்தில் இருந்து வெளியான ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா தோற்றம் ஏற்கெனவே வரவேற்பைப் பெற்றது.