ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் திரைப்படம், ‘வாரணாசி’. இதில் மகேஷ் பாபு ‘ருத்ரா’ என்ற சிவ பக்தராக நடிக்கிறார். இது காலத்தைக் கடந்து பயணிக்கும் சாகசத் திரைப்படம். இதில் பிரியங்கா சோப்ரா, மந்தாகினி என்ற கதாபாத்திரத்திலும் பிருத்விராஜ், கும்பா என்ற கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
இப்படம் பற்றி சமீபத்தில் ராஜமவுலி கூறும்போது, ‘‘வாரணாசி காலத்தைக் கடந்து பயணிக்கும் கதையைக் கொண்டுள்ளது. இதன் கதை வாரணாசியில் தொடங்கி, அண்டார்டிகா, ஆப்பிரிக்கா மற்றும் கடந்த காலத்துக்கு அதாவது ரோமுக்குச் சென்று, இறுதியில் வாரணாசிக்கு மீண்டும் திரும்புகிறது.
சுமார் 80 சதவீதப் படப்பிடிப்பை முடித்து விட்டோம்; மீதமுள்ள 20 சதவீதப் பணிகள் நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்புடன் இணைந்து போஸ்ட் புரொடக் ஷன் பணிகளும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருவதால் திட்டமிட்டபடி படம் வெளியாகும். ஐமேக்ஸில் உருவாகும் முதல் இந்திய படம் இது’’ என்றார்.