சமூக வலைதளப் பதிவு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு காட்டமாக பதிலளித்துள்ளார் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
சமீபத்தில் அனுபமா பரமேஸ்வரனின் இன்ஸ்டாகிராம் பதிவு, இணையத்தில் பலராலும் பேசப்பட்டது. அந்தப் பதிவு துருவ் விக்ரமுடன் ஏற்பட்ட காதல் முறிவால் பதிவிட்டுள்ளார் என பலரும் கருத்து தெரிவித்தார்கள். இதனிடையே இன்ஸ்டாகிராம் பதிவு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு காட்டமாக பதிலளித்துள்ளார் அனுபமா பரமேஸ்வரன்.
’கிரேஸி கல்யாணம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அனுபமா பரமேஸ்வரன், “அது எனது சமூக வலைதளம். அதில் எதை பதிவிட வேண்டும் என்பதை நானே முடிவு செய்கிறேன். நான் எனது மனக்குமுறலை வெளிப்படுத்தவில்லை. ஒரு பெண் கடந்து வரும் மாற்றத்தைப் பற்றிதான் பேசினேன்.
அதைச் செய்ததில் பெருமைதான். என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என் வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? அது எங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கம். எங்களுக்கு பிடித்ததை நாங்கள் பதிவிடுகிறோம்” என்று தெரிவித்துள்ளார் அனுபமா பரமேஸ்வரன்.