அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் ஃபாசில் ஆகியோர் நடித்து வெளியான திரைப்படம் ‘புஷ்பா 2: த ரூல்’. சுகுமார் இயக்கிய இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
தெலுங்கில் உருவான இந்தப் படம் தமிழ், இந்தி, மலையாள மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது. வசூலிலும் சாதனைப் படைத்தது. இந்நிலையில் ‘புஷ்பா 2: த ரூல்’ திரைப்படம் ஜப்பானில் நாளை (ஜன.16) வெளியாகிறது. இப்படத்தின் தொடக்கக் காட்சி ஜப்பானில் நடைபெறுவது போல அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அங்கு இப்படத்துக்கு ‘புஷ்பா குன்ரின்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதன் ஜப்பானிய மொழி டிரெய்லர் ஏற்கெனவே வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்தப் படத்தின் விளம்பரத்துக்காக அல்லு அர்ஜுன் தனது குடும்பத்துடன் அங்கு சென்றுள்ளார். இப்படத்தை கீக் பிக்சர்ஸ், சோசிகு நிறுவனங்கள் அங்கு சுமார் 250 திரையரங்கு களில் வெளியிடுகின்றன.