தென்னிந்திய சினிமா

பிருத்விராஜ் - கரீனா கபூரின் ‘டாய்ரா’ முதல் தோற்றம் வெளியீடு

ப்ரியா

பிருத்விராஜ் - கரீனா கபூர் இணைந்து நடித்திருக்கும் ‘டாய்ரா’ படத்தின் முதல் தோற்றப் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

பிருத்விராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் படத்தின் முதல் தோற்ற போஸ்டரையும், ட்ரெய்லர், பட வெளியீடு குறித்த தகவலை பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‘இரண்டு அதிகாரிகள், இரண்டு பார்வை, ஓர் உண்மை. ட்ரெய்லர் ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாகிறது.

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட ‘டாய்ரா’ இந்தி மற்றும் மலையாளத்தில் செப்டம்பர் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

போஸ்டரில், பிருத்விராஜும் கரீனா கபூரும் எதிரெதிர் துருவங்களாக நிற்கின்றனர்.

பிருத்விராஜ் போலீஸ் உடையில் கம்பீரமாக நிற்கிறார். கரீனா கபூர் மெல்லிய வெள்ளை ஆடைக்கு மேல் அடர் நீல நிற கோர்ட் அணிந்திருக்கிறார். அவர்களுக்கு பின்னால், ஒரு முகம் முழுவதும் குற்றம் நடந்த பகுதிகளில் கட்டப்படும் போலீஸ் டேப் சுற்றப்பட்டுள்ளது. இந்தப் பின்னணி இது ஒரு க்ரைம் த்ரில்லர் படம் என்பதை விளக்குகிறது.

மேக்னா குல்சர் இயக்கி இருக்கும் இந்தப் படத்தை ஜுங்லீ பிக்சர்ஸ் தயாரித்து உள்ளனர். கரீனா கபூர் – பிருத்விராஜ் முதல் முறையாக இணைந்து நடித்திக்கும் இந்தப் படம் செப்டம்பர் 18-ம் தேதி வெளியாக இருக்கிறது.    

SCROLL FOR NEXT