தென்னிந்திய சினிமா

நானியை இயக்கும் பிரேம்குமார்

ஸ்டார்க்கர்

நானி நடிக்கவுள்ள புதிய படத்தினை பிரேம்குமார் இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ஸ்ரீகாந்த் இயக்கி வரும் ‘தி பாரடைஸ்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் நானி. அதனைத் தொடர்ந்து சுஜித் மற்றும் செளரியா ஆகியோரது படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். இந்தப் படங்களைத் தொடர்ந்து ‘96’ மற்றும் ‘மெய்யழகன்’ படங்களின் இயக்குநர் பிரேம்குமார் இயக்கவுள்ள படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் நானி.

நானி – பிரேம்குமார் சந்திப்பின் போது கூறிய கதை, நானிக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இதே கதை தான் விக்ரமுக்கு கூறியது என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஃபகத் பாசில் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் பிரேம்குமார். அதனைத் தொடர்ந்து பிரேம்குமார் இயக்கும் படத்தில் நானி நடிப்பார் என தெரிகிறது.

தற்போதைக்கு நானி – பிரேம்குமார் கூட்டணி உறுதியாகி இருக்கிறது. இதன் தயாரிப்பாளர், படப்பிடிப்பு உள்ளிட்ட எதுவுமே இன்னும் முடிவாகவில்லை. விரைவில் இது குறித்த தெளிவு ஏற்படும் என தெரிகிறது.

SCROLL FOR NEXT