நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘தி ராஜா சாப்’. இந்தப் படத்தின் புதிய ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் படம் வரும் ஜனவரி 9-ம் தேதி வெளியாக உள்ளது.
மாருதி இயக்கியுள்ள இப்படத்துக்கு தமன் இசை அமைத்துள்ளார். திகில், நகைச்சுவை, ஆக்ஷன் என மாஸ் மசாலா வகை படமான இது, தெலுங்கு, தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாகிறது. இதில் சஞ்சய் தத், பொமன் இரானி, மாளவிகா மோகனன், நித்தி அகர்வால், ரித்தி குமார் உள்பட பலர் நடிக்கின்றனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
‘தி ராஜா சாப்’ புதிய ட்ரெய்லர் எப்படி? - இந்த புதிய ட்ரெய்லரின் ரன் டைம் 3.12 நிமிடங்கள். இதில் பார்வையாளர்களுக்கு காட்சி அனுபவத்தை உறுதி செய்யும் வகையில் படக்குழு செயல்பட்டுள்ளது. இதில் பிரபாஸ் மற்றும் சஞ்சய் தத் ஆகியோர்தான் முக்கிய கதாபாத்திரங்களாக உள்ளனர். ஹாரர், காமெடி, டிராமா, ஆக்ஷன் என மாஸ் மாடலாக படத்துக்கான அத்தனை அம்சங்களும் இதில் உள்ளது.
மாய வீட்டுக்குள் செல்லும் பிரபாஸ் மற்றும் குழுவினர் அங்கிருந்து தப்பித்தார்களா என்பது மாதிரியான காட்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளது. இந்த ட்ரெய்லரின் கடைசி ஷாட்டில் பேய் போல வேடமணிந்துள்ளார் பிரபாஸ். இது ஹாலிவுட் படமான ஜோக்கர் பாத்திரத்தை நினைவுப்படுத்தும் வகையில் உள்ளது. இது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
“100 நாள் வேலைத் திட்டத்தை பாஜக இழுத்து மூடியது பெண்களுக்கு விரோதமானது” - முதல்வர் ஸ்டாலின்