தென்னிந்திய சினிமா

பிர​பாஸ் நடிக்​கும் ‘ஸ்​பிரிட்’ படப்பிடிப்பு தளத்​தில் தீ விபத்து

நிலா

பிர​பாஸ் நடிக்​கும் ‘ஸ்​பிரிட்’ படத்தை இயக்கி வரு​கிறார், சந்​தீப் ரெட்டி வங்​கா. இதில் த்ரிப்தி திம்ரி நாயகி​யாக நடிக்​கிறார். தென் கொரிய நடிகர் மா டாங்க் சியோக், விவேக் ஓபராய், காஞ்​சனா உள்பட பலர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர்.

தெலுங்​கு, தமிழ், இந்​தி, கொரியா உள்பட 8 மொழிகளில் உரு​வாகும் இப்​படத்​தின் படப்​பிடிப்பு ஹைத​ரா​பாத்​தில் செட் அமைத்து நடந்து வரு​கிறது. இந்​நிலை​யில் இதன் படப்​பிடிப்​புத் தளத்​தில் வியாழக்​கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்​பட்​டது. இதில் பல்​வேறு படப்​பிடிப்பு உபகரணங்​கள் சேதமடைந்​தன.

படக்​குழு​வைச் சேர்ந்த ஒரு​வருக்கு லேசான காயம் ஏற்​பட்​டது, அவர் உடனடி​யாக அரு​கிலுள்ள மருத்​து​வ​மனைக்​குக் கொண்டு செல்​லப்​பட்​டார். சம்​பவம் நடந்தபோது நடிகர் பிர​பாஸ் படப்பிடிப்புத் தளத்​தில் இல்​லை. இப்​படம் அடுத்த ஆண்டு மார்ச் 5ம் தேதி வெளி​யாக இருப்​ப​தாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

          
SCROLL FOR NEXT