தென்னிந்திய சினிமா

சிவராஜ்குமார் நடிக்கும் ‘ஒரிஜினல் மான்ஸ்டர்’

நிலா

உபேந்​திரா நடித்த ‘கப்​ஸா’ திரைப்​படத்தை இயக்​கிய ஆர்​.சந்​துரு, மீண்​டும் ஒரு பிரம்​மாண்ட பான் இந்​தியா திரைப்​படத்தை இயக்​கு​கிறார். இதில் சிவ​ராஜ்கு​மார் ஹீரோ​வாக நடிக்​கிறார். தெலுங்கு நடிகர் சுனில் உள்பட பலர் நடிக்​கின்​றனர். அஜனீஷ் லோக்​நாத் இசையமைக்​கும் இப்​படத்​துக்கு ஏ.ஜே ஷெட்டி ஒளிப்​ப​திவு செய்​கிறார். ஆர்சி ஸ்டூடியோஸ் தயாரிக்​கும் இப்​படத்​தின் தலைப்பு மற்​றும் மோஷன் போஸ்​டர் மும்​பை​யில் வெளி​யிடப்​பட்​டது.

இவ்​விழா​வில் சிவ​ராஜ்கு​மார், கீதா சிவ​ராஜ்கு​மார், தயாரிப்​பாளர் ஆனந்த் பண்​டிட், இயக்​குநர் சந்​துரு உள்பட படக்​குழு​வினர் கலந்​து​கொண்​டனர். இப்​படத்​துக்கு ‘ஒரிஜினல் மான்​ஸ்​டர்’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர்.

இயக்​குநர் சந்​துரு கூறும்​போது, “நான் ‘கப்ஸா’ படத்தை உரு​வாக்​கிய​போது, இந்​தியா முழு​வதும் சுமார் 4 ஆயிரம் திரையரங்​கு​களில் ஒரு படத்தை வெளி​யிட முடி​யும் என்​பதை உணர்ந்​தேன். ஆனால் அதற்கு ஒரு வழி​முறை இருக்​கிறது, அதை நட்​சத்​திரங்​களால் மட்​டுமே சாத்​தி​யப்​படுத்த முடி​யும்.

அந்​த சிந்​தனை​தான் இந்​தத் திரைப்​படத்​தின் நடிகர்​கள் தேர்வை தீர்​மானித்​துள்​ளது. ஒரு கன்​னடப் படத்தை மற்ற மொழிகளில் வெறும் டப்​பிங் செய்​வதோடு நிறுத்​தாமல், வெவ்​வேறு மொழிகளைச் சேர்ந்த நடிகர்​களை வைத்து அந்​தந்த மாநில ரசிகர்​களிட​மும் படத்​தைக் கொண்டு சேர்க்க விரும்​பு​கிறோம். சிவராஜ்கு​மாரை மனதில் வைத்​து​தான் இந்​தக் கதையை எழு​தினேன். அவர் உலகளா​விய ஹீரோ. தமிழ்​, மலை​யாளம்​ உள்​பட மற்​ற மொழி நடிகர்​களும்​ இதில்​ நடிக்​க இருக்​கிறார்​கள்​” என்​றார்​.

SCROLL FOR NEXT