தென்னிந்திய சினிமா

“எனக்கு இன்ஸ்பிரேஷன் தமிழ் திரைக் கலைஞர்கள் தான்!” - நானி நெகிழ்ச்சி

நிலா

நானி நடித்​துள்ள ‘த பாரடைஸ்’ படத்​தில் மோகன்​பாபு, கயாடு லோஹர், இந்தி நடிகர் ராகவ் ஜூயல், சோனாலி குல்​கர்​னி, சம்​புர்​ணேஷ் பாபு உள்பட பலர் நடித்​துள்​ளனர். ஸ்ரீகாந்த் ஒடெலா இயக்​கி​யுள்ள இப்​படத்​துக்கு அனிருத் இசையமைத்​துள்​ளார். இப்​படம் தமிழ், தெலுங்​கு, இந்​தி, கன்​னடம், மலை​யாளம் உள்பட பல்​வேறு மொழிகளில் வரும் 24-ம் தேதி வெளி​யாக இருக்​கிறது.

இப்​படத்​தின் செய்​தி​யாளர்​கள் சந்​திப்பு சென்​னை​யில் நடை​பெற்​றது. படக்​குழு​வினர் கலந்து கொண்​டனர். விழா​வில் நானி பேசும்​போது, “தமிழ்த் திரைப்​படங்​கள் எனக்கு பைபிள் மாதிரி. என்​னுடைய சினிமா அறி​வுக்​கும் சினிமா மீதான ஆர்​வத்​துக்​கும் சினிமா மீதான காதலுக்​கும் தமிழ் சினி​மா​வில் உள்ள கலைஞர்​கள்​தான் இன்​ஸ்​பிரேஷன்.

அதி​லும் கமல்​ஹாசன், மணிரத்​னம், கே.​பாக்​ய​ராஜ், பார​தி​ராஜா என பல சாதனை​யாளர்​களைக் குறிப்​பிடலாம். நான் ஒவ்​வொரு முறை​யும் சென்​னைக்கு வரும் போதெல்​லாம் என்​னுடைய திரை குடும்​பத்​துக்கு வந்​தது போன்று உணர்வு எழும். எனக்​கும், சென்​னைக்​கும், தமிழ்​நாட்​டுக்​கும் அதிக தொடர்பு உண்​டு.

என் மீது தமிழ் ரசிகர்​கள் காட்​டும் அன்​பு அதி​கம். அதனை நான் பல தருணங்​களில் உணர்ந்​திருக்​கிறேன். என் திரை​யுலக பயணத்​தில் மிக​வும் கடின​மாக உழைத்த திரைப்​படம் இது. பெரிதும் நம்​பிக்​கை​யுடன் எதிர்​பார்க்​கும் திரைப்​பட​மும் இது​தான்” என்​றார்.‌

SCROLL FOR NEXT