தென்னிந்திய சினிமா

பாலகிருஷ்ணாவின் புதிய படம் தொடக்கம்

ஸ்டார்க்கர்

பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு பட பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

போயப்பத்தி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘அகண்டா 2’. இப்படத்தினைத் தொடர்ந்து கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் பாலகிருஷ்ணா. இந்தக் கூட்டணி இதற்கு முன்பாக ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தில் இணைந்து பணிபுரிந்துள்ளது.

பாலகிருஷ்ணா – கோபிசந்த் மாலினேனி இணையும் படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. விருத்தி சினிமாஸ் நிறுவனம் இப்படத்தினை பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது. இந்நிறுவனம் ராம்சரண் நடித்து வரும் ‘பெடி’ படத்தினை இப்போது தயாரித்து வருகிறது.

பாலகிருஷ்ணா படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இசையமைப்பாளராக தமன், ஒளிப்பதிவாளராக அரவிந்த் எஸ் காஷ்யப் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இதன் முதற்கட்டப் பணிகள் மற்றும் படப்பிடிப்புக்கான இடங்கள் தேர்வு அனைத்தும் முடிவடைந்துவிட்டன.

‘அகண்டா 2’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் முடிவடைந்தவுடன், முழுவீச்சில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு பணிபுரிந்து வருகிறது.

SCROLL FOR NEXT