நடிகர் நாகார்​ஜு​னா​

 
தென்னிந்திய சினிமா

நாகார்​ஜு​னா​வின் 100-வது படம் ‘கிங் 100’

நிலா

நாகார்​ஜு​னா​வின் 100-வது திரைப்​படத்தை ரா.​கார்த்​திக் இயக்குகிறார். இவர் ‘நித்​தம் ஒரு வானம்’, ‘மேட் இன் கொரி​யா’ ஆகிய தமிழ்ப் படங்​களை இயக்​கிய​வர். இந்​தப் படத்தை நாகார்ஜுனாவின் அன்​னபூர்ணா ஸ்டூடியோஸ் தயாரிக்​கிறது.

இதில் தபு முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். இரு​வரும் 28 வருடங்களுக்​குப் பிறகு மீண்​டும் இணைந்​துள்​ளனர். சுஷ்மிதா பட், விஜயேந்​திரா முக்​கிய வேடங்​களில் நடிக்​கின்​றனர். தேவி பிர​சாத் இசை அமைக்​கிறார்.

நாகார்​ஜு​னா​வின் பிறந்த நாளை முன்​னிட்டு இப்​படத்​தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்​குழு வெளி​யிட்​டுள்​ளது. படத்​துக்கு ‘கிங் 100’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இதில் நாகார்ஜுனா மோசடி தொழில​திப​ராக நடிக்​கிறார். டிச.24-ம் தேதி படம் வெளி​யாகும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT