‘நாகபந்தம்’ படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிக்காக ரூ.20 கோடியில் க்ளைமேக்ஸ் காட்சியினை உருவாக்க படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
அபிஷேக் நாமா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘நாகபந்தம்’. விராட் கர்ணா நாயகனாக நடித்து வரும் இப்படத்தினை கிஷோர் அன்னபுரெட்டி, நிஷிதா நாகிரெட்டி உள்ளிட்டோர் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகின்றனர். மிதாலஜிக்கல் ஆக்ஷன் படமாக இப்படம் தயாராகி வருகிறது.
இதன் க்ளைமேக்ஸ் ஆக்ஷன் காட்சிகளுக்காக ரூ.20 கோடி பொருட்செலவில் க்ளைமேக்ஸ் காட்சியினை உருவாக்கவுள்ளார்கள். இதற்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றன. இந்தக் காட்சியின் மையப் பகுதியாக, புராதன கோயில் கலை வடிவத்தை, பிரதிபலிக்கும் விதத்தில் புனித வாசல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சியினை தாய்லாந்தின் பிரபல சண்டை இயக்குநர் கெச்சா காம்பக்டீ வடிவமைத்து வருகிறார்.
இப்படத்தில் நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா, பி.எஸ்.அவினாஷ் உள்ளிட்டோர் விராட் கர்ணா உடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். பான் இந்தியா படமாக இப்படத்தினை விளம்பரப்படுத்த படக்குழு முடிவு செய்துள்ளது.