அபிஷேக் நாமா இயக்கத்தில் விராட் கர்ணா, நபா நடேஷ், ஜகபதி பாபு, ஜெயப் பிரகாஷ், முரளி சர்மா, பி.எஸ்.அவிநாஷ் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம், ‘நாகபந்தம்’.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தை, கிஷோர் அன்னபுரெட்டி, நிஷிதா நாகிரெட்டி ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்திய புராணங்கள், வரலாறு மற்றும் கோயில் சார்ந்த மரபுகள் குறித்து இயக்குநர் மேற்கொண்ட விரிவான ஆய்வுகளின் அடிப்படையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் டிரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. கற்பனை செய்து பார்க்க இயலாத சக்திகளைப் பெறுவதற்காக, வலிமை வாய்ந்த தீய சக்தி, அதைக் கைப்பற்ற முயலும் போது, சிவ பெருமான் அங்கு தோன்றி நாக சாதுக்களுடன் கைகோப்பதாக இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஜூலை 3-ல் இப்படம் வெளியாகிறது.